Saturday, August 23, 2008

அதென்னவோ ...!!!

அதென்னவோ வயது ஏற ...ஏறத்தான் ஞாபகசக்தி கொஞ்சம் குறையும் என்பார்கள் ! எனக்கென்னவோ இப்போது தான் கூடிக் கொண்டே போவதைபோல ஒரு சின்ன பிரம்மை ...
ஏனென்றால் சமீப காலங்களில் தான் சுருங்கச் சொன்னால் ஆறு மாத காலமாக என் மகள் எல் கே ஜி செல்லத் தொடங்கிய நாட்களில் இருந்து அவளுடன் சேர்ந்து நானும் மறுபடி கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன் . விஷயம் ஒன்றும் பெரிதாக இல்லை எனக்கு பத்தாம் வகுப்பு வரை கை வரப் பெறாத ஆங்கிலம் இன்று அவள் தயவால் சட்டெனப் புரிகிறது ...நான் முதுகலை பயிலும் பயிலும்போது மட்டுமே அறிய முடிந்த சில கடினமான ஆங்கில வார்த்தைகளை இப்போது என் மகளும் அவள் வகுப்பு நண்பர்களும் சரளமாக பேசிக் கொள்வதைப் பார்க்கும் போதுசந்தோஷமாக இருந்தாலும் சின்னதாக ஏக்கமும் வரத்தான் செய்கிறது ...என்ன செய்ய ? கொசுவுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் என்று ஒரு நாள் முழுக்க ஆங்கில அகராதியில் தேடி விட்டு கண்டு பிடிக்க முடியாமல் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஒத்திப் போட்ட எனது நான்காம் வகுப்பு ஆசிரியையை நான் எந்த விதத்திலும் குற்றம் சொல்ல முடியாதே ...!
எட்டாம் வகுப்பு முடித்தவுடன் அந்தக் காலத்தில் ஆசிரியப் பயிற்சி பெற்று இளம் வயதிலேயே நடுநிலைப் பள்ளிகூட ஆசிரியை ஆகி விட்ட அவரை என்ன தான் சொல்ல முடியும் ?
இன்றைய நாட்களைப் போல அன்று இடை நிலை ஆசிரியர்களுக்கு ஆங்கில அறிவு தேவைப் பட்டிருக்கவில்லையோ என்னவோ ? எது எப்படியோ அன்று அந்தப் பள்ளியில் பயின்று விட்டு வந்து தான் இன்று என் மகளுக்கு நான் பாடம் சொல்லித் தருகிறேன் ...இத்த்டனை நாட்களுக்குப் பிறகு நான் கற்றுக்கொண்ட ஒரே ஒரு உபயோகமான விஷயம் ;
முயற்சி என்ற ஒன்று மட்டும் எந்தப் பள்ளியில் படித்தாலும் நிச்சயமாய் கை விடப் படாதிருக்க வேண்டும் என்பதே ...
பிறகென்ன ?
அன்று இல்லாத வழக்கமாய் நான் இன்று தானே ஆங்கில அகராதியை முழுமையாய் தினம் ஒரு முறையேனும் புரட்டிப் பார்க்க வேணும் என்று அவஷியம் ஏற்பட்டிருக்கிறது !
இது நல்ல முன்னேற்றமோ இல்லையோ ?
என் மகளிடம் அவமானப் பட முடியாது ...பிறகு அது அவளது வகுப்பாசிரியை ...தலைமை ஆசிரியை ...
அவளது நண்பர்கள் ...நண்பர்களின் பெற்றோர்கள் எனத் தொடர்ந்து பிறகு என்னையே எனக்கு வெறுக்கச் செய்து விடும் ...இதை விட பேசாமல் எதையாவது கற்றுக் கொள்வது மேல் அல்லவா?
அப்படித் தான் நான் தொடர்ந்து முயச்சியோடு பயிற்ச்சி எடுத்துக் கொள்வதை ஒரு பழக்கமாக்கி விட்டேன் ;
சரி...சரி .................................
இதுவரை நான் என்னைப் பற்றி சொல்லிக் கொண்டு வந்தேன் என்று நினைத்தீர்களா ?
அது தான் இல்லை !!!
நான் எங்களைப் பற்றி சொன்னேன் .
நாங்கள் யார் ?
பெற்றோர் ...
பெற்றோர் ....
பெற்றோர் ...
நாங்களே தான் அய்யா ...
ஆங்கில வழிக் கல்வி பயிலும் நடுத்தரக் குடும்பத்துக் குழந்தைகளின் பெற்றோர் .

ஜோ வின் குட்டி பூ

பூக்கள் எப்போதுமே சிரித்துக் கொண்டே தான் இருக்குமோ ...
சின்ன சின்னப் பூவே
நீ கண்ணால் பார்த்தல் போதும்
தொட்டுத் தொட்டுப் பேச
என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கை பட்டால்
பட்ட மரம் பூ மலரும்
பாறையிலும் நீர் சுரக்கும்
இதெல்லாம் நிஜமோ என்னவோ ? பார்த்ததும் அந்த சிரிப்பு நம்மையும் தொற்றிக் கொள்வது என்னவோ உண்மை தான் .