Saturday, August 16, 2008

என்ன பேசலாம் ?
எனக்கு பேச பிடிக்கும் ...அதை விட யாராவது அர்த்தத்தோடு பேசினால் கேட்பதற்கும் பிடிக்கும் .
பிறகு அதை பற்றி சிந்திக்கவும் பிடிக்கும் ...பேச விஷயமா இல்லை இந்த உலகத்தில் ...!!!
ஒரு மாலை நேரம் ...!
இப்படி கூட கற்பனை செய்து கொள்ளலாம் ...
ஒரு மாலை இளவெயில் நேரம் ...
அழகான இலையுதிர்காலம்
பேசி சிரிக்க ஒத்த நண்பர் கூட்டம் இருந்தால் எல்லா காலங்களும் அழகான காலங்களே !!!
வசந்த காலங்களே ...;
அப்படி பட்ட அருமையான ஒரு நேரத்தை கற்பனை செய்து கொண்டால் நாம் பேசுவதெல்லாம் அழகான கதைகளாகி விடலாம் ஒரு நாள் ...!!!
பேசலாமா ...
நேரம் தொடங்குகிறது ...
இந்த நிமிடத்திலிருந்தே...!
கயல்