Friday, August 29, 2008

என்ன என் கையில் ?இரண்டாம் பாகம்

அஹிம்சை என் கையில்
ஆளை மிரட்டும்
ஹிம்சை என் கையில்
இன்பம் என் கையில்
அதை விரட்டும்
துன்பம் என் கையில்
வாழ்வு என் கையில்
அதில் ஒழிந்து
மருட்டும்
சாவும் சில நேரம் என் கையில்
அடுதவனுக்குதவும்
நெஞ்சம் என் கையில்
பிறரை கண்டு
புழுங்கும்
வஞ்சம்
என் கையில்
என்ன என் கையில்
ஜகத்தை
ஜெயிக்கும்
இகத்தை
அடக்கும்
அகத்தை
மடக்கும்
மந்திரம்
என் கையில்
என்ன என் கையில் ?
இந்த வாழ்வு
என் கையில்
என்கையில் என்ன
இல்லை என்கையில் ?

No comments: